கத்திரிக்காய் வறுவல்.
22 கார்த்திகை 2024 வெள்ளி 14:37 | பார்வைகள் : 135
காய்கறிகளை விரும்பி சாப்பிடும் நபர்கள், பலவிதத்தில் சமைத்தாலும், சில காய்கறிகளை சாப்பிடவே மாட்டார்கள். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். கத்திரிக்காயை சாம்பாரில் போட்டால் எடுத்து ஓரமாக வைத்து சாப்பிடும் நபர்கள் இங்கு ஏராளம். அதுவே கத்தரிக்காயை நீளவாக்கில் மீன் மாதிரி நறுக்கி, அதில் சில மசாலா பொருட்களை சேர்த்து, நல்ல எண்ணெயில் ஊற்றி முறையாக பொரித்து எடுத்தால், தரமான அந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் வறுவல் தயாராகிவிடும். இப்படி செஞ்சு கொடுத்தா இது மீன் வறுவலா அல்லது கத்திரிக்காய் வறுவல என குழம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அதிகம்.
இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்கள் :
வேர்க்கடலை - 1/2 கப்.
சீரகம் - 2 ஸ்பூன்,
ப்யாத்கே மிளகாய் - 8.
பூண்டு - 3 பல்,
கல் உப்பு - 1/2 ஸ்பூன்,
கத்தரிக்காய் - 1/2 கிலோ,
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது,
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது,
கறிவேப்பிலை - சிறிது,
கல் உப்பு - தேவையான அளவு.
சுவையான கத்திரிக்காய் வறுவல் செய்முறை:
முதலில் கத்திரிக்காயை மீன் போன்று சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.அதன்பிறகு வேர்க்கடலையை கடாயில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்,அதே கடாயில், தனியா, சீரகம், மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து 3 நிமிடம் வரை வறுத்து, அவற்றை முழுமையாக ஆறவிடவேண்டும்.
பிறகு அவற்றை மிக்சி ஜாடிக்கு மாற்றி, கல் உப்பு சேர்த்து, அனைத்தையும் நன்றாக பொடியாக அரைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து விடவும்.பெருங்காய தூள், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து, கிளற வும், வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுக்கவும்,அதன்பிறகு நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்து, கத்தரிக்காயை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.
இந்த மாதிரி மசாலா நிறைந்த கத்திரிக்காய் வறுவலை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளவர்கள் மீன் வருவதற்கு பதிலாக கத்திரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் சைவ பிரியர்களுக்கு இதுபோன்று சுவையான ரெசிபிகளை செய்து தரலாம்.