உலகிலேயே விலையுயர்ந்த வாட்ச் எது.., அதன் விலை எத்தனை கோடி தெரியுமா?
22 கார்த்திகை 2024 வெள்ளி 14:46 | பார்வைகள் : 5877
உலகின் மிக விலையுயர்ந்த வாட்ச் என்ன என்பதையும், அதன் விலை எவ்வளவு என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உயர்தர கார்கள் மற்றும் ஆடம்பர வீடுகளைப் போலவே, சில கடிகாரங்களும் அதிகமான விலையை கொண்டுள்ளன.
உலகின் மிகவும் அரிதான மற்றும் மிகவும் விரும்பப்படும் கடிகாரங்களில் ஒன்றான கடிகாரம் அதன் அதன் ஒப்பிடமுடியாத ஆடம்பரத்திற்கு பெயர் பெற்றுள்ளது.
உலகின் மிகவும் விலையுயர்ந்த இந்த வாட்ச்- இன் பெயர் கிராஃப் டயமண்ட்ஸ் ஹாலுசினேஷன் (Graff Diamonds Hallucination Watch) ஆகும். இதன் விலை 55 மில்லியன் டொலர் ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.465 கோடி ஆகும்.
இது, இதுவரை தயாரிக்கப்பட்ட கடிகாரங்களில் மிகவும் விலை உயர்ந்தது. இந்த வாட்சை கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனர் மற்றும் தலைவரான லாரன்ஸ் கிராஃப் (Laurence Graff) என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, 2014 -ம் ஆண்டில் Baselworld இல் வெளியிடப்பட்டது. இந்த கடிகாரத்தின் உண்மையான தனித்துவம் என்னவென்றால் 110 காரட்களைக் கொண்ட வண்ணமயமான வைரங்களை கொண்டது தான்.
அதவாது இந்த வாட்ச், கைவினைத்திறனுடன் இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களுடன், உலகின் மிக அரிதான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வைரங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆடம்பரமான நிற வைரங்கள் அவற்றின் அரிதான தன்மை மற்றும் மதிப்புக்காக மிகவும் விரும்பப்படுகின்றன.
வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கைவினைஞர்கள் உட்பட 30 வல்லுநர்கள் கொண்ட குழு, சுமார் நான்கரை ஆண்டுகளாக இந்த வாட்சை உருவாக்கியது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan