Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

24 கார்த்திகை 2024 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 152


இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில், ஜெய்சங்கர் பேசியதாவது: 10 ஆண்களில் இந்தியா உலக அளவில் ஒரு பெரிய வீரராக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே ஏதுவாக இருந்தாலும் உலக தரத்தில் கூட தனித்த நிற்கின்றன. உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பம், நிலவின் தெற்கு பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது உள்ளிட்டவை உலக அளவில் இந்தியாவுக்கு மரியாதையை அதிகரிக்க செய்தது.

திறமையான இந்தியர்களை மற்ற நாடுகள் தேடி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் உறவுகள் வலுப்பெற்றது. எங்கள் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நம்மை தனித்து நிற்க வைக்கிறது. பழங்கால கலாசாரங்கள் வெற்றிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பல துறைகள் பல்வேறு சாதனைகளை படைத்தது.

ஒவ்வொரு அன்னிய நேரடி முதலீட்டு பேச்சுவார்த்தையிலும், நாங்கள் கடுமையாக சிந்திக்கிறோம். தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். இன்று, பாரத் பிராண்ட் மிக பெரியதாக கருதப்படுகிறது. ஒரு லட்சிய பிராண்டாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்