Maisons-Alfort : சிறுவன் உயிருக்கு போராட்டம். மதுபோதையில் சாரதி கைது!
24 கார்த்திகை 2024 ஞாயிறு 17:35 | பார்வைகள் : 11795
13 வயதுடைய சிறுவன் ஒருவர் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முற்பட்டபோது, அதிவேகமாக பயணித்த ஸ்கூட்டர் ஒன்று சிறுவனை மோதித்தள்ளியுள்ளது.
பரிசின் தென்கிழக்கு புறநகரான Maisons-Alfort இல் இச்சம்பவம் நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 6.55 மணி அளவில் Cadiot Avenue வீதியில் உள்ள பாதசாரி கடவையில் குறித்த சிறுவன் வீதியை கடந்துள்ளார். அதன்போது ஸ்கூட்டர் ஒன்றில் நபர் ஒருவர் வேகமாக பயணித்து, சிறுவனை மோதித்தள்ளியுள்ளார்.
சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். 36 வயதுடைய, காவல்துறையினரால் நன்கு அறியப்பட்ட சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நிறைந்த மதுபோதையில் அவர் பயணித்ததாகவும், இதற்கு முன்னதாக இதேபோன்ற வீதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் எனவும், அவருக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் தீவிரநிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan