Paristamil Navigation Paristamil advert login

மக்களை கொச்சைப்படுத்தும் தி.மு.க.,: எச்.ராஜா குற்றச்சாட்டு

மக்களை கொச்சைப்படுத்தும் தி.மு.க.,: எச்.ராஜா குற்றச்சாட்டு

25 கார்த்திகை 2024 திங்கள் 03:27 | பார்வைகள் : 4537


அனைத்து வகையிலும், தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைவரும், நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்,” என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ், தற்போது அரசியலில் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் ஆட்சி பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த பாரதம், தற்போது உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தற்போது ஐ.எம்.எப்., போன்ற சர்வதேச நிதியங்கள், பாரதம் விரைவில் மூன்றாவது இடத்திற்கு வரும் எனக் கூறுகின்றன. விஜய்க்கு, கீழ்மட்ட அளவில் கட்டமைப்பு இல்லை. கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி இருப்பதாகவும் தெரியவில்லை.

அனைத்து வகையிலும், தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைவரும், அதன் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'எஸ்.சி., தானே' என ஜாதியை குறிப்பிட்டு பேசுகிறார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மனு கொடுக்க சென்ற பெண்ணின் மனுவை வாங்கியவரை, தலையில் அடிக்கிறார். இவ்வாறு கூறினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்