Paristamil Navigation Paristamil advert login

மஹாராஷ்டிரா புது அரசு இன்று பதவியேற்பு

மஹாராஷ்டிரா புது அரசு இன்று பதவியேற்பு

25 கார்த்திகை 2024 திங்கள் 03:28 | பார்வைகள் : 2959


மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி அரசு இன்று நவ.,25 மீண்டும் பதவியேற்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 235 இடங்களில் இக்கூட்டணி கைப்பற்றியது. தனிப்பெருங்கட்சியாக பா.ஜ., உள்ளது. இதனையடுத்து அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ.,வின் பட்னாவிஸ், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே கடுமையான போட்டி உள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என இன்னும் முடிவாகவில்லை எனக்கூறப்படுகிறது. புதிய முதல்வர் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரும், மூத்த அமைச்சருமான தீபக் கேசர்கார் , மஹாராஷ்டிரா மாநில அரசு பதவியேற்பு விழா இன்று பதவியேற்க உள்ளதாக கூறியுள்ளார்.

அதேநேரத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டுமே இன்று பதவியேற்பார்கள் எனக்கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்