Paristamil Navigation Paristamil advert login

சூறாவளி.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. தொடருந்து சேவைகள் நிறுத்தம்!

சூறாவளி.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. தொடருந்து சேவைகள் நிறுத்தம்!

25 கார்த்திகை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 537


பிரான்சின் மத்திய கிழக்கு மாவட்டங்களை இன்று சூறாவளி தாக்க உள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிக்கு 90 தொடக்கம் 120 கி.மீ வரை சூறாவளி வீசும் எனவும், சில இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்தே புயல் காற்று வீசத்தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Puy-de-Dôme, Saône-et-Loire, Allier, Loire, Haute-Loire, Rhône, Ain, Jura மற்றும் Isère ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கள் தடைப்பட வாய்ப்புள்ளதாகவும், தண்டவாளங்களில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்தை பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo-France அறிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்