ஈஃபிள் கோபுரத்தை சூழ உள்ள பகுதிகளில் வீழ்ச்சியடைந்துள்ள கொள்ளைச் சம்பவங்கள்!
25 கார்த்திகை 2024 திங்கள் 07:24 | பார்வைகள் : 653
ஈஃபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் பொருட்டு Trocadéro (16 ஆம் வட்டாரம்), Champ de Mars (7 ஆம் வட்டாரம்) போன்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருட ஜனவரியில் இருந்து ஒக்டோபர் மாத இறுதி வரை 86 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 196 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் 305 தககுதல்களும் இதே காலப்பகுதியில் பதிவாகின.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டு (ஜனவரி- ஒக்டோபர்) 462 கொள்ளைச் சம்பவங்களும், 2023 ஆம் ஆண்டில் 828 கொள்ளைகளும், 2022 ஆம் ஆண்டில் 1,145 கொள்ளைகளும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஈஃபிள் கோபுரத்தைச் சூழ உள்ள பகுதிகள் மிகவும் பாதுகாப்பாக மாறி வருவதை உறுதிசெய்யக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.