பிரித்தானியாவை தொடர்ந்து தாக்கி வரும் பெர்ட் புயல் (Storm Bert)
25 கார்த்திகை 2024 திங்கள் 09:34 | பார்வைகள் : 414
பிரித்தானியாவை பெர்ட் புயல்(Storm Bert) தொடர்ந்து தாக்கி வருகின்றது.
பல பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 82 மைல் வரை பதிவாகியதை அடுத்து பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் இன்றும் இருக்கும் நிலையில், தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் இரவு 9 மணி வரை மஞ்சள் நிற காற்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் காற்று எச்சரிக்கையுடன், மஞ்சள் நிற மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பெரிய அலைகள், பறக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான வெள்ளப்பெருக்கு காரணமாக காயம் மற்றும் "உயிருக்கான ஆபத்து" ஏற்படலாம் என்றும் மெட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ், தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மஞ்சள் வானிலை எச்சரிக்கையானது சில பகுதிகளில் பலத்த காற்றுக்கான எச்சரிக்கையாகவும், சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை நிலவரம் மற்றும் எச்சரிக்கைகள் குறித்த தகவல்களை பெற, மெட் அலுவலகத்தின் இணைய தளத்தைப் பார்வையிடவும் அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.