Paristamil Navigation Paristamil advert login

சாள்-து-கோல் விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வளர்ப்பு நாய்!

சாள்-து-கோல் விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வளர்ப்பு நாய்!

25 கார்த்திகை 2024 திங்கள் 11:43 | பார்வைகள் : 426


வளர்ப்பு நாய் ஒன்று சாள்-து-கோல் (Roissy-Charles de Gaulle) விமானநிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 19, செவ்வாய்க்கிழமை செக் குடியரசில் இருந்து பரிசுக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணி ஒருவர், அவருடன் வளர்ப்பு நாய் ஒன்றையும் அழைத்து வந்துள்ளார். விமானம் தரையிறங்கி, கதவு திறக்கப்பட்டவுடன் குறித்த Amalka என பெயரிடப்பட்ட வளர்ப்பு நாய் கீழே இறங்கி ஓடியுள்ளது.

அன்றைய தினம் நாய் விமானநிலையம் முழுவதும் தேடப்பட்டும் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானநிலைய ஊழியர்கள் நாயைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் குறித்த நாய் எங்கேயும் தென்படவில்லை. ஐந்து நாட்களாகியும் நாயை கண்டுபிடிக்கமுடியவில்லை.

எயார் பிரான்ஸ் நிறுவனம் மீது குறித்த நாயின் உரிமையாளரான 29 வயதுடைய பெண் விளக்கம் கோரி புகார் அளித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்