Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான காலநிலை அறிவித்தல்!

இலங்கையில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான காலநிலை அறிவித்தல்!

25 கார்த்திகை 2024 திங்கள் 15:45 | பார்வைகள் : 3204


எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பிரதான 16 குளங்கள் பெருக்கெடுத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பொறியியலாளர் லஹிருனீ ஜயதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பல நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக குளங்களுக்கு இருமருங்கிலும் தாழ் நிலப்பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பொறியியலாளர் லஹிருனீ ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்