143 கி.மீ வேகத்தில் புயல்... இரண்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
25 கார்த்திகை 2024 திங்கள் 17:22 | பார்வைகள் : 475
இன்று திங்கட்கிழமை காலை நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த எச்சரிக்கை இரண்டு மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசியது. Lyon (Rhône) நகரில் 125 கி.மீ வேகத்திலும், Saint-Chamond (Loire) நகரில் அதிகபட்சமாக 143 கி.மீ வேகத்திலும் புயல் வீசியது. பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
Saint-Étienne மற்றும் Lyon நகரங்களில் முன்னெச்சரிக்கை காரணமாக தொடருந்து போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன.
22,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Auvergne-Rhône-Alpes (15,000 வீடுகளும்) Burgundy (7,400 வீடுகளும்) ஆகிய இரு மாவட்டங்களிலும் மின் தடைப்பட்டுள்ளன.