ஐரோப்பிய நகரங்களும் ஜனத்தொகையும்!!
1 பங்குனி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18015
பிரான்சின் அதிக சனத்தொகை கொண்ட நகரம் எது..? இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்தே இருக்கும். ஆம்.. பரிஸ் தான். ஆனால் ஐரோப்பிய நகரங்களில்...??
மேற்கண்ட கேள்விக்கு ஒன்றைய பிரெஞ்சு புதினத்தில் விடை அறிவோம்!!
ஐரோப்பிய நகரங்களில் அதிக சனத்தொகை கொண்ட நகரங்களில், பத்தாவது இடத்தில் உள்ளது ருமேனியாபின் Bucharest நகரம். மொத்த சனத்தொகை -2,106,144.
ஐரோப்பாவின் பிரபலமான நகரங்களில் ஒன்றான இலண்டன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு மொத்த சனத்தொகை 8,825,001.
ஜெர்மனியின் பெர்லின் நகரின் மொத்த சனத்தொகை 3,723,914. இது பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
அப்படியென்றால் பரிஸ் எங்கு தான் உள்ளது??!
இவ்வருட ஆரம்பத்தில் (ஜனவரி 2019) எடுக்கப்பட்ட கணக்கின் படி பரிஸ் மக்கள் தொகை 2,140,526. பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அட அதிர்ச்சியாகவேண்டாம்.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரமே உள்ளது. இங்கு மொத்த மக்கள் தொகை 15,029,231. அடேங்கப்பா...!!
ஜனத்தொகை குறைவாக இருப்பதும் நல்லது தானே!!