Paristamil Navigation Paristamil advert login

பிரான்சை உலுக்கிய Mazan பாலியல் வழக்கு.. !! - 50 பேருக்குச் சிறை!!

பிரான்சை உலுக்கிய Mazan பாலியல் வழக்கு.. !! - 50 பேருக்குச் சிறை!!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 09:19 | பார்வைகள் : 607


”viols de Mazan” எனப்படும் பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய பாலியல் வல்லுறவு வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகளுக்கு வந்தது. 50 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
***

Dominique Pélicot என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்படுகிறார். Vaucluse மாவட்டத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வைத்து பெண்களை ஆபாசமாக தொலைபேசிகளில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்காடியின் பாதுகாவலர் அவரை பிடித்து வைத்துக்கொண்டு, காவல்துறையினரை அழைக்கின்றார்.

பின்னர் காவ்லதுறையினர் அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தும் போதும், “நான் இதனை முன்னர் எப்போதும் செய்ததில்லை, எனது மனைவி என்னை விட்டு பிரிந்துவிட்டார். அந்த ஆதங்கத்தில் தான் இவ்வாறு செய்துவிட்டேன்!” என தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் நிபந்தைகளின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்.

பின்னர் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அதன்போது, அவரது இரண்டு தொலைபேசிகள் ஆராயப்படுகிறது.

அதில் ஏராளமான ஆபாச காணொளிகள் இருப்பதை பார்க்கின்றனர். பின்னர் அவரது வீடும், அவரது கணனியும் சோதனையிடப்படுகிறது. அதன் பின்னரே அவர்கள் ஒரு திருப்புமுனையான விடயத்தை கண்டறிகின்றனர். அது, குறித்த ஆபாச காணொளிகளில் இருப்பது ஒரே ஒரு பெண் எனவும், அப்பெண் Dominique Pélicot இன் மனைவி எனவும் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு காணொளியிலும் ஆண்கள் மட்டும் தான் மாறுபடுகிறார்கள். ஆனால் பெண் அவரது மனைவி என்பது பல கோணங்களில் இந்த வழக்கை திசை திரும்ப்பி விடுகிறது. அத்துடன் அந்த காணொளிகளை coco எனும் இணையத்தளத்தில் (தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது) பதிவேற்றி, பணம் சம்பாதித்துள்ளார்.

விசாரணைகளின் அடுத்த கட்டமாக அவரது மனைவி தேடப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்.

அப்போது, அவரது மனைவிக்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை எனும் அதிர்ச்சி தெரியவருகிறது. மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர் சுயநினைவிழ்ந்ததன் பின்னர், அவரை பல ஆண்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

குறித்த இணையத்தளமூடாக பல ஆண்களை வல்லுறவுக்கு அழைத்து, அதனை தொலைபேசியில் பதிவு செய்து, இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இவ்வாறாக 72 ஆண்கள், 92 தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு அப்பெண்ணை உட்படுத்தியிருந்தனர்.

பிரான்சின் தென்கிழக்கு நகரமான Mazan இல் இச்சம்பவம் கடந்த 2011 ஜூலை மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளது.

Dominique Pélicot இற்கு அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 49 பேருக்கு 10 தொடக்கம் 13 வரையான ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டுள்ளது. அவர்கள் இவ்வருட இறுதிக்குள் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்