Paristamil Navigation Paristamil advert login

நகரசபைத் தேர்தலில் போட்டியில் இருந்து விலகும் ஆன் இதால்கோ!

நகரசபைத் தேர்தலில் போட்டியில் இருந்து விலகும் ஆன் இதால்கோ!

26 கார்த்திகை 2024 செவ்வாய் 09:46 | பார்வைகள் : 4066


பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ, 2026 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள நகரசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

தற்போது இரண்டாவது முறை தலைநகர் பரிசுக்கு முதல்வராக உள்ள ஆன் இதால்கோ, மூன்றாவது முறை போட்டியிடப்போவதில்லை எனவும், இந்த முடிவை அவர் எப்போதோ எடுத்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார். “நான் இந்த முடிவை நீண்ட நாட்களுக்கு முன்னரே எடுத்துவிட்டேன். இரண்ட இரண்டு ஆட்சிக்காலங்களே தேவையான மாற்றங்களைக் கொண்டுவர போதுமானது என நான் நினைக்கிறேன்!” என அவர் தெரிவித்தார். 

ஆன் இதால்கோ கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து பரிசின் நகரபிதாவாக உள்ளார். இறுதியாக 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர் 1.74% சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டு முதலாவது சுற்றோடு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்