பன்னீர் பிரியாணி
26 கார்த்திகை 2024 செவ்வாய் 12:43 | பார்வைகள் : 112
பிரியாணி பிரியர்கள் அனைவருக்கும் எந்த ஒரு ஏமாற்றமும் இல்லாமல் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி செய்வது போலவே சைவத்தில் ஒரு அட்டகாசமான பிரியாணியை செய்ய முடியும் அதுதான் பன்னீர் பிரியாணி.
தேவையானப் பொருட்கள்
பாசுமதி அரிசி - 1/4 கிலோ (1 மணி நேரம் ஊற வைக்கவும்),
பனீர் -200 கிராம் (சிறு துண்டுகளாக நறுக்கியது).
எண்ணெய்-2 டீஸ்பூன்,
நெய்.
கரம் மசாலா,
மிளகாய் தூள் தலா 1 டீஸ்பூன்,
பிரியாணி இலை,
இலவங்கப்பட்டை,
வெங்காயம். தக்காளி-தலா 1,
ஏலக்காய், கிராம்பு. பச்சை மிளகாய் தலா 3.
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி. புதினா தலா 1 கைப்பிடி,
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி தூள் 1/2 டீஸ்பூன்,
தயிர் 1/4 கப்,
தேவையான அளவு உப்பு.
செய்முறை :
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, அடுப்பை ஆன் செய்யவும். இரண்டும் சூடானதும், அதில் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து விட்டு, பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் என அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து பின்னர் ஒரு கைப்பிடியளவு புதினா இலை சேர்த்து கலந்து விடவும்.