Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!

ஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்!!

15 மாசி 2019 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18247


ஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவல்கள்...
 
உலகில் அதிக மக்களால் பார்வையிடப்படும் இரண்டு முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான் ஈஃபிள். (மற்றயது லூவர் என்பது நீங்கள் அறிந்ததுதான்) 
 
ஈஃபிள் கோபுரத்தின் முதலாவது தளம் தரையில் இருந்து 57 மீற்றர்கள் உயரத்தில் உள்ளது. இரண்டாவது தளம் 115 மீற்றர் உயரத்தில் உள்ளது. மூன்றாவது தளம் தரையில் இருந்து 276 மீற்றர் உயரத்தில் உள்ளது. 
 
கடும் குளிர் காலத்தில் நீங்கள் மூன்றாவது தளத்துக்கே போக முடியாது. சில வேளைகளில் கீழிருந்து பார்த்தால் மூன்றாவது தளமே தெரியாது. 
 
தரையில் இருந்து 276 மீற்றர் உயரத்தில் மூன்றாவது தளம் என்பதால், குளிர் பற்றி சொல்லத்தான் வேண்டுமா?
 
ஆனால், மூன்றாவது தளத்தில் நீங்கள் நின்றால், 70 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தை நீங்கள் பார்த்து ரசிக்கலாமாம். 
 
கிட்டத்தட்ட முழு பரிசையும் பார்த்து.. அதற்கு அந்தப்பக்கமும் பார்க்கலாம்..
 
உதாரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து பார்த்தால், சாள்-து-கோல் விமான நிலையம் தெரியும். அடேங்கப்பா...!! (அதற்கு தெளிந்த காலநிலை வேண்டும் எனது ஒரு கொசுறு தகவல்)
 
அடுத்தமுறை தெரிகிறதா என பார்த்துவிடுங்கள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்