Paristamil Navigation Paristamil advert login

ராமதாஸ் பற்றி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு

ராமதாஸ் பற்றி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு

27 கார்த்திகை 2024 புதன் 09:08 | பார்வைகள் : 251


ராமதாசுக்கு வேறு வேலை இல்லை' என்று சொன்னதற்காக, முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுதும் பா.ம.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள விவகாரத்தில்,

தமிழக மின்வாரியத்தின் பெயரும் இருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.

தடுக்க முடியாது


இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அறிக்கை வெளியிடுகிறார். அதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.இது, பா.ம.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல், பா.ம.க., தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவதை தடுக்க முடியாது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, நா.த.க., தலைவர் சீமான், த.மா.கா., தலைவர் வாசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தமிழகம் முழுதும் நேற்று, பா.ம.க., தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய, மத்திய மாவட்ட பா.ம.க., செயலர் மோகன்ராம், ''ராமதாஸ் மீதான தரக்குறைவான விமர்சனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, ''பா.ம.க., மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் ராதாமணி, ''ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று, நினைக்கிறார்களா

எங்க அய்யாவ பத்தி பேசினால், கத்தி எடுத்து வந்து வெட்டுவேன்,'' என, ஆவேசமாகப் பேசினார். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில், அக்கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எம்.எல்.ஏ., சிவகுமார் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீஸ் தடுப்பை மீறி உள்ளே சென்று கோஷமிட்டனர். 'முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிட்டால், விழுப்புரத்தில் நடக்கவுள்ள விழாவில் பங்கேற்க விட மாட்டோம்' என்றனர்.

திருப்பத்துார், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களிலும், பல மாவட்டங்களிலும் பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் ஆவேசம்


அரியலுாரில் பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், “வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டோர் நினைவு மண்டபத்தை, விழுப்புரத்தில் முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்.

''அதனால், வன்னியர்களுக்கு முதல்வர் மீது மதிப்பு உயர்வதை பொறுக்க முடியாமல் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்,” என்றார்.''ராமதாஸ் தான் அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவார். முதல்வர் எந்த விதத்திலும் அவரை குறைத்து பேசி விடவில்லை. எனவே, முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசுவதை, உடனடியாக அன்பு மணி நிறுத்திக்கொள்ள

வேண்டும்,'' என்றும் கூறினார். ''மன்னிப்பு கேட்கும் வழக்கமே, தி.மு.க.,வினருக்கு கிடையாது,” என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆவேசமாக பேட்டி அளித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்