Paristamil Navigation Paristamil advert login

Grand Rex - சில அடடா தகவல்கள்!!

Grand Rex - சில அடடா தகவல்கள்!!

14 மாசி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18373


உங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம். 
 
சந்தேகமே வேண்டாம். ஐரோபாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது தான். ஒரே நேரத்தில் மொத்தமாக 2,800 பேர் அமரலாம். 
 
சார்லி சாப்ளினை பிரான்சுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பிரான்சின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பாளரான Jacques Haïk இத்திரையரங்கை கட்டினார். 
Auguste Bluysen எனும் பிரெஞ்சு கட்டிடக்கலைஞரும்,  John Eberson எனும் அமெரிக்க வடிவமைப்பாளரும் சேர்ந்து இந்த திரையரங்ககை வடிவமைத்ததோடு, கட்டிட பணிகளையும்  மேற்கொண்டனர். 
 
1932 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி இந்த திரையரங்கு திறக்கப்பட்டது. இதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு. 1940 இல் இருந்து 1944 வரையான நான்கு ஆண்டுகளில் இதற்கு Soldatenkino என ஒரு பெயரையும் சூட்டினார்கள். 
 
இங்கு ஒவ்வொரு வருட ஏப்ரலிலும் <<Jules Verne Adventure Film Festival>> விருது நிகழ்வு இடம்பெறும். ஆறு நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்வுகளில் 48,000 பேர் வரை கலந்துகொள்வார்கள். 
 
Grand Rex என இதை நாம் அழைத்தாலும், இதற்கு Cinéma Le Grand Rex à Paris என ஒரு முழு பெயரும் உண்டு.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்