வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்
27 கார்த்திகை 2024 புதன் 10:43 | பார்வைகள் : 123
அமெரிக்காவின் நன்றி செலுத்தும் நாளினை முன்னிட்டு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.
குறித்த நிகழ்வு 25.11.2024 அமெரிக்க வெள்ளை மாளிகை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடத்தின் அறுவடை மற்றும் கிடைக்கப்பெற்ற வெகுமதிகள் ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் முகமாக அமெரிக்கா மற்றும் கனடா உட்பட பல்வேறு நாடுகளில் நன்றி செலுத்தும் நாள் கொண்டாடப்படுகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஆட்சியில் இருந்த காலத்தில், அவரது மகன் டேட் லிங்கன் விருந்துக்காக கொண்டுவரப்பட்ட வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதற்கமைய அவரும் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, பல வருடங்களுக்கு பின்னர் 1947ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஹெரி ட்ரூமன் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கி நன்றி செலுத்தும் நாளை கொண்டாடியுள்ளார்.
அதன் பின்னர், அமெரிக்காவில் இது ஒரு கலாசாரமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.