Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் போர் நிறுத்த உடன்பாடு -   லெபனான் வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் 

 இஸ்ரேலின் போர் நிறுத்த உடன்பாடு -   லெபனான் வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் 

27 கார்த்திகை 2024 புதன் 11:00 | பார்வைகள் : 6324


 இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையிலான யுத்தநிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

அதனை  தொடர்ந்து ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் , தென்லெபனானில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு திரும்பியுள்ளார்கள்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கும் தென்லெபனானிற்கும் இடையிலான முக்கிய வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

,பொதுமக்கள்பொருட்களுடன் கார்கள் செல்வதை அவதானிக்க முடிகின்றதாகவும், கார்கள் வாகனங்களில் இருந்து ஹெஸ்புல்லா கொடிகளை பொதுமக்கள் அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்பட்டுதியவண்ணம் லெபனான் திரும்புவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பொதுமக்களை உடனடியாக அவர்களின் பகுதிகளிற்கு செல்லவேண்டாம் என இஸ்ரேலிய லெபனான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்

வர்த்தக‌ விளம்பரங்கள்