Paristamil Navigation Paristamil advert login

இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!

இந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்!!

13 மாசி 2019 புதன் 10:35 | பார்வைகள் : 17605


மெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போல் அச்சு அசலாக உருவங்களை வடித்து, காட்சிக்கு வைப்பார்கள். 
 
பரிசிலும் உள்ளது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அது குறித்து தெரிந்துகொள்வோம். 
 
Musée Grévin எனும் இந்த அருங்காட்சியகம் ஒரு மெழுகு அருங்காட்சியகம் (Wax museum) ஆகும். இது பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ளது. மிக பழமை வாய்ந்ததும் கூட...!! 
 
இங்கு 450 வரையான கதாப்பாத்திரங்களை மெழுகு சிலையாக வடித்து காட்சிக்கு வைத்துள்ளனர். இவற்றில் பிரெஞ்சுத் தலைவர்கள், உலகத்தலைவர்கள், முக்கிய புள்ளிகள், சினிமா நட்சத்திரங்கள் என பட்டியல் நீள்கிறது. 
 
19 ஆம் நூற்றாண்டில் இறுதியில் தயாரிக்கப்பட்டிருந்த சிலைகள் கூட அணிவகுப்பில் உள்ளன. 770 தொடக்கம் 800 ஆம் ஆண்டு வரை பிரான்சை ஆட்சி செய்த மாமன்னன் Charlemagne சிலை தொட்டு, மூன்றாம் நெப்போலியன் வரை இந்த வரலாறு தொடர்கிறது. 
 
இந்த சிலைகளில் நீங்கள், அவர்களின் முக வடிவமைப்பினை காண்பது ஒரு புறம் இருக்க, அந்த அந்த நூற்றாண்டுகளின் உடைகளில் அவர்கள் தோற்றமளிப்பது ஒரு பெரும் வரலாற்று புதையலாக இருக்கும். 
 
ஆராய்ச்சியாளர் ஆல்பேட் ஐன்ஸ்டீன், தேசத் தந்தை மகாத்மா காந்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷா-ரூக்-ஹான், ஓவியர் பாப்லோ பிகாசோ, பொப்-ஸ்டார் மைக்கேல் ஜாக்சன், பிரெஞ்சு இசை மற்றும் நடனக்கலைஞர் ஜோசபின் பேக்கர் என இங்கு பல துறைகளில் இருந்து பல நபர்கள் அணிவகுக்கின்றனர். 
 
முக்கியமானதொரு விஷயம் உள்ளது. பிரெஞ்சு ஆய்வாளர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், போர் வீரன் Jean-Paul Marat இன் சிலை இங்கு உள்ளது. இது ஏன் இத்தனை அவதானிப்பை பெறுகிறது என்றால், Jean-Paul Marat பயன்படுத்திய 'ஒரிஜினல்' வாளையே இச்சிலையுடன் இணைத்துள்ளார்கள். தவிர இவர் பயன்படுத்திய குளியல் தொட்டியையும் அருகே காட்சிக்கு வைத்துள்ளனர். 
 
உலக அழகி ஐஸ்வர்யா ராயை கூட சிலையாக வடித்துள்ளார்கள். இது போதாதா நாம் அங்கு ஒரு விஸிட் அடிக்க??
 
தினமும் காலை 9:30 இல் இருந்து 6 மணிவரை திறந்திருக்கும். 10 Boulevard Montmartre, 75009 Paris எனும் முகவரியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்