நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு
27 கார்த்திகை 2024 புதன் 13:25 | பார்வைகள் : 227
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்த வீடியோ தொகுப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த 18ஆம் தேதி வெளியான நிலையில், இந்த வீடியோவில் தனுஷ் தயாரிப்பில் உருவான "நானும் ரவுடிதான்" படத்தின் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த காட்சிகளை தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக, பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர் பார் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர, தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.