இரண்டாக பிரிந்த Corsica! - ஒரு வரலாற்றுக்கதை!!
11 மாசி 2019 திங்கள் 10:32 | பார்வைகள் : 18076
பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவட்டங்களாக ஐந்து மாவட்டங்கள் உள்ளன. இதுவும் நீங்கள் அறிந்தது தான். ஆக மொத்தம் 101 மாவட்டங்கள் உள்ளன அல்லவா?? இருக்கட்டும்.
பிரான்சின் கடல் கடந்த தீவான Corsica தீவில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஆரம்பத்தில் இந்த தீவு முழுவதையும் ஒற்றை மாவட்டமாக கொண்டிருந்தார்கள். அதாவது Corsica நூறாவது மாவட்டம்.
1975 ஆம் ஆண்டில், இல்லை இல்லை செல்லாது செல்லாது என தீவை இரண்டாக பிரித்து, Haute-Corse என ஒன்றையும், Corse-du-Sud என ஒன்றையும் பெயரிட்டு, தனி தனி மாவட்டங்களாக பிரித்துவிட்டனர்.
இதில் Corse-du-Sud மாவட்டத்துக்கு தலைநகராக Ajaccio நகரத்தையும், Haute-Corse மாவட்டத்துக்கு Bastia நகரை தலைநகராகவும் அறிவித்தனர். இந்த இரண்டு மாவட்டமும் சேர்ந்தது Corsica எனும் மாகாணம். <<நோ கன்பியூசன்>>ஃ என தெளிவாக அறிவித்துவிட்டார்கள்.
இந்த தீவில் பண்டைய இத்தாலியினர் வசித்ததால், இத்தாலி மொழி பேசுபவர்கள் இங்கு இன்னமும் இருக்கின்றனர். இத்தாலி கலைகளும், கட்டிடங்களும் கூட இங்கு இன்னமும் உண்டு. இத்தாலியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இத்தீவை, 1755 ஆம் ஆண்டு பிரான்சுக்கு விட்டுக்கொடுத்தனர் இத்தாலியினர்.
இங்கு தான் மாவீரன் நெப்போலியன் பிறந்தார்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, 2018 ஆம் ஆண்டில் , இத்தீவினை ஒற்றை பிராந்திய கூட்டு.. அதாவது collectivité territoriale unique என அறிவித்துவிட்டார்கள். இதற்கு பின்னால் ஒரு பெரும் கதை உண்டு. அதை பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்!!