பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10044
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.
அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.
இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும்.
அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும். முகப்பருக்கள் எதனால் வருகிறது? தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனி பாக்டீரியாவை வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சினைகளையும் உண்டாக்கி விடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ்., கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும். இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கி விடும்.
அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். உடல் சூட்டினால் பருக்கள் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.
சிலருக்கு குறிப்பிட்ட கால இடை வெளியில் இந்த பருக்கள் மறைந்து விடுகிறது. சிலருக்கோ முகத்தின் அழகை சீர்குலைப்பது போல் குழிகள் உண்டாகி அவலட்சணத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருப் பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும்.
அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
ஆவிப் பிடித்தல்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்
கிராம்பு: கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவவும்: அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
சந்தனப் பொடி: சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.
தேன்: தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம். யாரையும் எளிதில் எதிர் கொண்டு பேசுவதற்கு கூட கூச்சத்தை ஏற்படுத்தும்.
இந்த பருக்களை மேற்கூறப்பட்டுள்ள செலவு குறைந்த மருத்துவ குறிப்புக்களை கையாண்டு பருக்கள் இல்லாத முகத்தை, நாமும் கொண்டு வருவோம்.