பிரெஞ்சுப் புதினத்தில் ஒரு பிரித்தானியத் தீவு!!
5 மாசி 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 20973
பிரெஞ்சுப் புதினத்தில் பிரித்தானியா குறித்து தெரிந்துகொள்ள என்ன வேண்டிக்கிடக்கு.. ?? இருக்கிறது.
'தனித்தீவில் சிறை வைத்தல்' என சொல்வதுண்டு இல்லையா. அதாவது நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதியை அடைத்து வைத்தால் தப்பிச் செல்ல வாய்ப்புண்டு என்பதால் கைதியை தனியே உள்ள தீவில் சிறை வைப்பார்கள்.
அப்படி வரலாறு ஒரு மாமனிதனை தனித்தீவில் சிறை வைத்தது.
Saint Helena (சென்-ஹெலனா) என அழைக்கப்படும் இந்த தீவு, எரிமலைகள் நிறைந்த தனித்தீவு. தனித்தீவு என்றால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எந்த நிலப்பரப்பும் தென்படாத தன்னந்தனி தீவு!!
பிரேஸிலின் Rio de Janeiro (சுருக்கமாக Rio) நகரில் இருந்து 4,000 கிலோமீற்றர்கள் தொலைவில் தெற்கு அத்லாண்டிக் கடற்பரப்பில் உள்ளது இந்த தீவு.
இந்த தீவு பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இந்த தீவில் சிறைவைக்கப்பட்டவர் தான் மாவீரன் நெப்போலியன்!!
1815 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் ஒரு நாள் நெப்போலியன் இத்தீவில் சிறைவைக்கப்பட்டார்.
கீழுள்ள இரண்டு புகைப்படங்களையும் பாருங்கள்.
ஒன்று: மாவீரன் நெப்போலியன் சென் ஹெலனா தீவில் இருந்து பிரெஞ்சு தேசத்தை நோக்கி பார்ப்பது போல் உள்ள ஓவியம்.
இரண்டு : சென் ஹெலனா தீவில் மாவீரன் நெப்போலியன் தங்கியிருந்த வீடு. இதற்கு Longwood House என பெயர்.
மாவீரன் நெப்போலியன் இந்த வீட்டில் மே மாதம் 5 ஆம் திகதி 1821 ஆண்டு உயிரிழந்தார்.