Paristamil Navigation Paristamil advert login

Légion d'honneur - விருதுகளும் கெளரவங்களும்!!

Légion d'honneur - விருதுகளும் கெளரவங்களும்!!

4 மாசி 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 17912


பிரான்சில் எத்தனையோ வகையான விருதுகளும் கெளரவிப்புக்களும் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் மிக மிக உயரிய விருதுகள் உள்ளன. அந்த 'லிஸ்ட்'இல் ஒன்று தான் Légion d'honneur விருதுகள்!!
 
இந்த விருது குறித்து சமீபத்தில் ஒரு செய்தியில் படித்திருப்பீர்கள்... மூன்று அமெரிக்கர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமையும், இந்த விருதும் அளிக்கப்பட்டிருந்தது. 
 
இராணுவத்தினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் இந்த Légion d'honneur உம் ஒன்று. 
 
1802 ஆம் வருடம் இந்த விருது Napoleon Bonaparte இனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இராணுவத்தினருக்கு மட்டும் இல்லாமல், சாதாரண பொதுமக்களில் நாட்டுக்காக ஏதேனும் சாகசங்கள் செய்தால் கூட இந்த விருது வழங்கப்படும். 
 
ஆரம்பத்தில் இந்த விருது பெறுபவர்கள் அரசியல் ரீதியாக பல நன்மைகளை பெற்றிருந்தார்கள். நேரடியாக மக்கள் வரவேற்பைப் பெற்று அரசியலில் ஜொலிக்கவும் செய்தனர். 
 
இந்த விருதில் ஐந்து பிரிவுகள் உண்டு. 
 
Chevalier (Knight), 
Officier (Officer), 
Commandeur (Commander), 
Grand officier (Grand Officer),
Grand-croix (Grand Cross)
 
ஆகிய பிரிவுகளும் உண்டு. 
 
சரி, இது இருக்கட்டும் அமெரிக்கர்களுக்கு இறுதியாக ஏன் இந்த விருது வழங்கப்பட்டது?? 
 
Amsterdam இல் இருந்து பரிஸ் நோக்கி வந்துகொண்டிருந்த தொடரூந்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தியிருந்தான். அப்போது தொடரூந்தில் பயணித்த குறித்த மூவரும் பயங்கரவாதிக்கு எதிராக தாக்குதல் நடத்தி, அவனை மடக்கி பிடித்திருந்தனர். இதன்காரணமாகவே இந்த விருது வழங்கப்பட்டது. 
 
அது தொடர்பான செய்தியினை படிக்க :
 
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்