Paristamil Navigation Paristamil advert login

Château de Fontainebleau அரண்மனை! - சில அடடா தகவல்கள்!!

Château de Fontainebleau அரண்மனை! - சில அடடா தகவல்கள்!!

3 மாசி 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18485


மத்திய பரிசில் இருந்து தென் கிழக்கு பக்கமாக 55 கிலோமீட்டர்கள் பயணித்தால், அங்கு உள்ளது தான் Château de Fontainebleau. இந்த நகரத்துக்கே (Fontainebleau) இது ஒரு அடையாளம்.

பிரான்சில் உள்ள மிகப்பெரிய royal châteaux களில் இதுவும் ஒன்று. அதாவது மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகளில் ஒன்று.

 

பிரெஞ்சு முடியாட்சியின் போது ஏழாம் லூயிஸ் மன்னனில் இருந்து மூன்றாம் நெப்போலியன் வரை இங்கு வசித்தார்கள்.

கட்டிடம் 1137 ஆண்டைச் சேர்ந்தது. பின்னர் ஆறாம் சாள்ஸ் மன்னன் (1494–1547) இந்த அரண்மனையை ஆண்டான். மறுமலர்ச்சி காலம் அழைக்கப்பட்ட அந்நாட்களில் குறித்த அரண்மனையை புதுப்பித்தான். புதிய வசதிகள், தொழில்நுட்பங்களை கொண்டுவந்தான்.

ஆடம்பரமான படுக்கையறைகள், நாடக அரங்குகள், திரையரங்கம், விளையாட்டுத்தளம், சீன அருங்காட்சியகம், முதலாம் நெப்போலியனுக்கான அருங்காட்சியகம், ஓவியங்கள், சிற்பங்கள், வேலைப்பாடுகள் என இன்று மிக பெரிதான பொக்கிஷமாக இது உள்ளது. அதாவது அருங்காட்சியகத்திலேயே இது ஒரு பெரும் பொக்கிஷம்.

 

1981 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

முகவரி : 77300 Fontainebleau.
+33 1 60 71 50 70

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்