Paristamil Navigation Paristamil advert login

ஓய்வை அறிவித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல்!

ஓய்வை அறிவித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல்!

29 கார்த்திகை 2024 வெள்ளி 08:23 | பார்வைகள் : 1094


இந்திய வேகமான பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான சித்தார்த் கவுல், ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஓய்வு குறித்து தெரிவித்துள்ள சித்தார்த் கவுல், “இப்போது ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த் கவுல் கிரிக்கெட் வாழ்க்கையில், விராட் கோலி தலைமையிலான 2008-ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சித்தார்த் கவுலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்