Paristamil Navigation Paristamil advert login

சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கும் சிறுவர்கள் தொடர்பில் சுவிஸ் மக்கள் கவலை

சமூக ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கும் சிறுவர்கள் தொடர்பில் சுவிஸ் மக்கள் கவலை

29 கார்த்திகை 2024 வெள்ளி 08:58 | பார்வைகள் : 789


சுவிட்சர்லாந்திலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த சிறுவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க, சுவிஸ் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசாங்கம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முடிவுக்கு சுவிட்சர்லாந்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது அது சுவிஸ் மக்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

சுவிஸ் மக்களில் 78 சதவிகிதம் பேர், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிப்பதை விரும்புவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் துவக்கத்தில், Addiction Switzerland என்னும் அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றின் முடிவுகள், சிறுவர்களில் பத்தில் எட்டு பேரும், சிறுமிகளில் பத்தில் ஒன்பது பேரும் தினமும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும், அவர்களில் 10 சதவிகிதம் பேர் பிரச்சினை ஏற்படும் அளவுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளன.

என்றாலும், இந்த விடயத்தில் சுவிஸ் அரசு அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

பல சமூக ஊடகங்களின் பயன்பாட்டு விதிகளின்படி, 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கக்கூடாது என்றும், சமூக ஊடகங்களின் விதிமுறைகளிலேயே சிறுவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கெதிராக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது சுவிஸ் உள் விவகாரங்கள் துறை அமைச்சகம்.

சுவிஸ் பெடரல் கவுன்சில் இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிப்பதைவிட, தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நல்ல பலன் கொடுக்கும் என அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்