இன்ஸ்டாகிராமில் வரும் லைவ் லொகேஷனை பகிரும் வசதி
29 கார்த்திகை 2024 வெள்ளி 09:13 | பார்வைகள் : 223
இன்ஸ்டாகிராமில் புதிதாக 2 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போட்டோ ஷேரிங் சமூக வலைதளமாக 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இன்ஸ்டாகிராம். 2012 ஆம் ஆண்டு பேஸ்புக்(தற்போது மெட்டா) 1 பில்லியன் டாலருக்கு இன்ஸ்டாகிராமை வாங்கியது.
தற்போது 2.4 பில்லியன் பயனர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களை கவர சேட், ரீல்ஸ், வீடியோ கால் என புதிது புதிதாக பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாவில் லைவ் லொகேஷனை பகிரும் அம்சம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்த லைவ் லொகேஷன் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே ஆக்ட்டிவ் ஆக இருக்கும். அதன் பின் அதுவாகவே கட் ஆகி விடும். வாட்ஸ்அப்பில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை லைவ் லொகேஷன் ஆக்டிவாக இருக்கும்.
இன்ஸ்டாகிராமில் நாம் ஒருவருக்கு பகிரும் லைவ் லொகேஷனை அவர்கள் யாருக்கும் பார்வேர்டு செய்ய முடியாது. லைவ் லொகேஷனை பகிர்ந்துளீர்கள் என்ற இண்டிகேட்டர் சம்பந்தப்பட்ட சாட் பாக்ஸில் இருக்கும். இந்த அம்சம் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
மேலும் இன்ஸ்டா பயனர்கள் தங்கள் பெயர்களையோ நண்பர்களின் பெயர்களையோ டைரக்ட் மெசேஜ்களில் மாற்றி வைக்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு புனை பெயர்(nick name)வைக்கலாம். இது உங்கள் இருவருக்குமான உரையாடல்களில் மட்டுமே காட்டும்.
இயல்பாக, நீங்கள் பின்தொடரும் நபர்கள் இதை செய்ய முடியும். ஆனால் உங்கள் புனைப்பெயரை யார் மாற்றலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். புனைப்பெயரை உருவாக்க, உங்கள் உரையாடலின் மேலே உள்ள பெயரை கிளிக் செய்து, பயனர்பெயரில் புனை பெயரை மாற்றலாம்.