Paristamil Navigation Paristamil advert login

Alma - Marceau தொடரூந்து நிலையமும் - பின்னணியும்!!

Alma - Marceau தொடரூந்து நிலையமும் - பின்னணியும்!!

2 மாசி 2019 சனி 10:30 | பார்வைகள் : 18007


பெயர் எப்படி வந்தது?? 
 
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள நிலையம், அருகில் உள்ள பல்வேறு இடங்களினால் மிக பிஸியான நிலையமாக மாறியுள்ளது.  இரண்டு பெயர்களை இணைத்தது தான் Alma - Marceau நிலையம். 
 
1854 ஆம் ஆண்டு இரஷ்யாவுக்கு எதிராக பிரான்சும் பிரித்தானியாவும் சேர்ந்து யுத்தம் நடத்தின.  << Alma யுத்தம் >> என அது அழைக்கப்ட்டது. உக்ரைன் நாட்டின் தெற்கு பிராந்தியமான Crimea நகரை ஊடறுக்கும் சிறிய ஆறு தான் இந்த Alma. அப்பகுதியில் யுத்தம் இடம்பெற்றதால் இதற்கு << Alma யுத்தம் >> என பெயர் சூட்டப்பட்டிருந்தது. தொலைகிறது...
 
இந்த யுத்தத்தில் பிரான்சும் -பிரித்தானியாவும் வெற்றியைப் பெற, அதன் நினைவாக இந்த பெயரை குறித்த நிலையத்துக்கு சூட்டினார்கள். 
 
நிலையத்தின் பெயரில் பாதி வந்துவிட்டது. 
 
17 ஆம் நூற்றாண்டுகளில் நாலா திசைகளிலும் யுத்தங்களும் ஆக்கிரமிப்புக்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, பிரெஞ்சு இராணுவத்தில் தளபதியாக இருந்தவர் தான் François Séverin Marceau. 
 
1769 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு தளபதியாக பல்வேறு யுத்தங்களிலும், யுத்தத்தின் ஒரு பகுதியிலும் பல வெற்றிகளை கண்டார். 
 
1785–1796 ஆம் ஆண்டுகளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. பல வெற்றிகளை இவர் கண்டிருந்தார். இவரின் நினைவாக பல தடயங்கள், நினைவுச் சின்னங்கள் பரிசில் உள்ளன. 
 
அப்படியான அடையாளங்களில் ஒன்று தான் இந்த தொடரூந்து நிலையம். இவரின் பெயரில் இருந்து Marceau எனும் பெயரை மாத்திரம் வெட்டி எடுத்து Alma உடன் இணைத்து Alma - Marceau எனும் பெயரை நிலையத்துக்கு சூட்டியுள்ளனர். 
 
மே மாதம் 27 ஆம் திகதி 1923 ஆம் ஆண்டு இந்த நிலையம் திறக்கப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்