Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தை நெருங்கும் பெஞ்சல் புயல்; வானிலை மையம்

தமிழகத்தை நெருங்கும் பெஞ்சல் புயல்; வானிலை மையம்

30 கார்த்திகை 2024 சனி 02:20 | பார்வைகள் : 356


வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் சென்னையில் இருந்து, 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

பெஞ்சல் புயலின் நகர்வு வேகம் குறைந்து மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது. புதுச்சேரிக்கு அருகே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்