Paristamil Navigation Paristamil advert login

கடல் சீற்றம் அதிகரிப்பு; நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு

கடல் சீற்றம் அதிகரிப்பு; நீர்வழித்தடங்கள் கண்காணிப்பு

30 கார்த்திகை 2024 சனி 02:26 | பார்வைகள் : 397


கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், வெள்ளநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், சென்னை நகரில் சேதம் அதிகரிக்கும்.

இதன் தாக்கம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஏற்படும். வங்க கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக, முகத்துவாரங்களில் தொடர்ந்து துார்வாரும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக பொக்லைன் வாகனங்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்