ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு வயது 50!!

23 தை 2019 புதன் 10:30 | பார்வைகள் : 20639
ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை எது தெரியுமா? Essonne இல் உள்ள Fleury-Mérogis சிறைச்சலை தான். இச்சிறைச்சலை தற்போது தனது 50 ஆவது பிறந்ததினத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.
அரை நூற்றாண்டு கடந்து 1969 ஆம் ஆண்டில் இந்த சிறைச்சாலை திறக்கபப்ட்டபோது பல்வேறு விதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் இது பெற்றது.
கொள்ளையர்கள் பயங்கரவாதிகள் என வில்லாதி வில்லன்களை எல்லாம் கம்பி எண்ண வைத்த பெருமை இந்த சிறைச்சாலைக்கு உண்டு.
தற்போது இச்சிறைச்சாலையில் ஒரு சில பகுதிகள் சிதைவடைந்து காணப்பட்டாலும், கைதிகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவே தற்போது பெரும் பிரச்சனையாகவும் உள்ளது.
தற்போது இங்கு 4,200 சிறைக்கைதிகள் உள்ளனர். இது சிறைச்சாலை இடவசதியை விட 43 வீதம் அதிகமாகும். ஒரு அறைக்குள் இரண்டில் இருந்து மூன்று வரையான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 21, 1969 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சிறைச்சாலைக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை 50 ஆவது பிறந்தநாள்!!
உள்ள போற ஐடியா எதுவும் இருக்கா??!!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025