இதுவரை இல்லாத அளவு கைதிகள்! - நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்!!

30 கார்த்திகை 2024 சனி 08:00 | பார்வைகள் : 6838
பிரான்சில் இதுவரை இல்லாத அளவு சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சிறைச்சாலைகள் இடவசதி இன்றி நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 ஆம் திகதி அன்று நிலவரப்படி 80,130 கைதிகள் பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 62,357 கைதிகளுக்கான சிறைச்சாலைகளே உள்ளன. ஆனால் 17,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் மேலதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர் எனவும், சில சிறைச்சாலைகள் அதன் அளவை விட 200% சதவீதம அதிக கைதிகளை சிறைவைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போதிய படுக்கை வசதி ஒன்றி தரைகளிலும், சில சிறைச்சாலைகளில் இருவர் தங்கக்கூடிய ஒரு அறையில் 10 கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டில் 15,000 பேருக்கான சிறைச்சாலை ஒன்று திறக்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே அந்த எண்ணிக்கையை பிரான்ஸ் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025