SNCF ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

30 கார்த்திகை 2024 சனி 09:00 | பார்வைகள் : 7938
SNCF தொடருந்து ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு வழங்குவதற்குரிய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
2.2% சதவீதத்தால் இந்த ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து முன்வைத்த கோரிக்கையை தொடருந்து நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. டிசம்பர் 11 ஆம் திகதி முதல் தொடருந்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் தொழிற்சங்கங்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருடாந்த கட்டாய பேச்சுவார்த்தை (négociations annuelles obligatoires) ஆண்டுதோறும் இடம்பெறுவது அறிந்ததே. புதிய ஆண்டுக்கான பேச்சுவார்த்தையின் முடிவில், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்த ஊதிய உயர்வு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025