Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனில் 130க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்கிய ரஷ்யா....! 

உக்ரைனில் 130க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்கிய ரஷ்யா....! 

30 கார்த்திகை 2024 சனி 07:41 | பார்வைகள் : 2209


உக்ரைனில் 130க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இரவோடு இரவாகவும், அதிகாலையிலும் உக்ரைனில் செலுத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கெர்சனில் பெண்ணொருவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ரோமன் ம்ரோச்கோ தெரிவித்தார்.

சுமார் 130 ட்ரோன்கள் ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் விமானப்படை தெரிவிக்கையில், "மாஸ்கோ ஒரே இரவில் 132 ட்ரோன்களை ஏவியது. 

அதில் 88 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன மற்றும் 41 ட்ரோன்கள் இழந்தன. 

மறைமுகமாக பாதுகாப்பு எதிர் நடவடிக்கைகளின் காரணமாக இருக்கலாம்" என தெரிவித்தது.  

மேயரின் கூற்றுப்படி, வான் பாதுகாப்பு ஒரு டஜன் பிராந்தியங்களுக்கு மேல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. 

குப்பைகள் விழுந்து தலைநகர் கீவில் உள்ள ஒரு சுகாதார மருத்துவமனையை சேதப்படுத்தியது.

இதற்கிடையில், உக்ரைனின் Donbas பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் உள்ள Rozdolne கிராமத்தை கைப்பற்றியதாக மாஸ்கோ கூறியது.

உக்ரைன் கடுமையான குளிர்காலத்தில் நுழையும்போது சமீபத்திய தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. 

மேலும் ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டு கிழக்குப் பகுதியில் முன்னேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.