Pont des Amours - காதலர்களுக்கான மேம்பாலம்!!
22 தை 2019 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 18348
பிரான்சில் எத்தனையோ ஆறுகள் உள்ளன, மேம்பாலக்கடவைகள் உள்ளன. ஆனா இது போல் ஒரு புகழ்பெற்ற மேம்பாலம் எதுவுமில்லை.
பெரும் சிரமத்துக்கு மத்திரியில், ஆச்சரியப்படும் விதத்தில் கட்டப்பட்ட மேம்பாலமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரண ஒரு பலகைக் கடவை.
Pont des Amours என அழைக்கப்படும் இந்த மேம்பாலம் எங்கு உள்ளது.
Auvergne-Rhône-Alpes இல் உள்ள Annecy எனும் சிறு கிராமத்தில் உள்ளது. இங்குள்ள ஆறு ஒன்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த மேம்பாலம் முதலில் Passerelle du Jardin public என அழைக்கப்பட்டது. மக்கள் மிக சாதாரணமாக தான் அந்த மேம்பாலத்தை பாவித்தனர். கடந்து சென்றனர்.
ஆனால் அந்த ஆறும், குளிர் காலத்தில் இங்கு கொட்டித்தீர்க்கும் பனியும், இலையுதிர் காலத்தில் இங்கு பரவியிருக்கும் காய்ந்த வண்ணச் சருகுகளும் இந்த பாலத்தை மிக மிக அழகான இடமாக மாற்றியது. 1855 இல் இருந்து 1859 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டது.
அப்போது இந்த பலத்தில் பல பாலியல் தொழிலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினார்கள். பின்னர் இது மெல்ல மெல்லத்தான் காதலர்கள் சந்திக்கும் இடமாக மாறியது.
நவம்பர் 18, 1906 ஆம் வருடம் அப்பிராந்திய நகரசபை இந்த மேம்பாலத்தை இரும்புப்பாலமாக மாற்ற எத்தனித்து, அதை நிறவேற்றவும் செய்தது.
இந்த பாலம் இன்று அதன் பூர்வீக பெயரை மறந்து Pont des Amours எனும் பெயரை பெற்றுள்ளது.
வருடத்தின் நான்கு பிரதான காலத்திலும் இங்கு காதலர்களுக்கு குறைவில்லாத ஒரு நிலை இங்கு உள்ளது.
சிறிய மேம்பாலம் என்றபோதும் அதன் புகழ் அந்த நகரத்தை தாண்டி பிரான்ஸ் முழுவதும் பரவி இருப்பதே இதற்கு சான்று..!!