Paristamil Navigation Paristamil advert login

டிசம்பர் மாதத்தில் அதிகரிக்கும் செலவும், அதிகரிக்காத வரவும். CAF.

டிசம்பர் மாதத்தில் அதிகரிக்கும் செலவும், அதிகரிக்காத வரவும். CAF.

30 கார்த்திகை 2024 சனி 09:17 | பார்வைகள் : 5842


வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து மருத்துவ செலவுகள் அதிகரிக்கவுள்ளது. டிசம்பர் 22-ம் திகதிக்குப் பின்னர் பொதுமருத்துவரை (médecin généralistes) சந்திப்பதற்கான கட்டணம் 26,50 யூரோக்களில் இருந்து 30,00 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. அதேபோல் 6 வயதிற்கு குறைந்த குழந்தைகள் மருத்துவரை சந்திப்பதற்கான கட்டணம் 31,50 யூரோக்களில் இருந்து 35,00 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது. மற்றும் மனநல மருத்துவரை சந்திப்பதற்கான கட்டணம் 51,70 யூரோக்களில் இருந்து 55,00 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.

அதேபோல் குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு (RSA, ASS, AER) கிறிஸ்மஸ் காலத்தில் வழங்கப்படும் 'prime de Noël' அரச விசேட கொடுப்பனது டிசம்பர் மாதம் 17ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. 2.2 மில்லியன் பிரெஞ்சு குடும்பங்கள் குறித்த கொடுப்பனவை பெற உள்ளார்கள். தனி நபருக்கு 152,45 யூரோக்கள் வீதம் வழங்கப்படும் என (caisse allocation de familiale) CAF அறிவித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அதேயளவு தொகையாக இருக்கும் என்றும் இதில் எந்த அதிகரிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்