Paristamil Navigation Paristamil advert login

Évry : பெயர்க்காரணம்!!

Évry : பெயர்க்காரணம்!!

21 தை 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18347


Évry இந்த நகரைப்பற்றி எந்த அறிமுகங்களும் தேவைப்படாது. பரிஸ் புறநகரின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று இது. 
 
Évry என சூட்டப்பட்டுள்ள இந்த பெயருக்கு பின்னால் பல 'ப்ளாஷ்பேக்'குகள் உள்ளன. 
 
முதலில் Évry இன் முழுப்பெயர் Évry-sur-Seine. அதாவது <<சென் நதிமீது உள்ள Évry>> 
 
அதைத் தான் சுருக்கி Évry என தற்போது அழைக்கிறார்கள். 
 
'ரோமன் எம்பையர்' காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்பட்ட Gaulish எனும் மொழியில் இருந்து Évry எனும் வார்த்தை உருவாகியுள்ளது. 
 
இந்த வார்த்தை Eburacon அல்லது Eburiacos ஆகிய இரு வார்த்தைகளில் இருந்து மருவி Évry எனும் வார்த்தை உருவானதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. 
 
அதாவது, <<எபிரோக்களின் நிலம்>> இதைத் தான் Eburacon அல்லது Eburiacos என அழைக்கிறார்கள். ஆக, Évry என்றாலும் அதே <<எபிரோக்களின் நிலம்>> எனும் அர்த்தத்தைத் தான் குறிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். 
 
1881 ஆம் ஆண்டு இந்த நகரம் <<Évry-Petit-Bourg>> எனவும் அழைக்கப்பட்டது. பிரெஞ்சு செல்வந்தர், நகர மேயர், செனட் சபை உறுப்பினராக இருந்த Paul Decauville என்பவரின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. 
 
இருந்தாலும் தற்போது அப்பெயர் புழக்கத்தில் இல்லை. சுருக்கமாக Évry!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்