பரிஸ் : ட்ராம் மோதி ஒருவர் - கவலைக்கிடம்!!
30 கார்த்திகை 2024 சனி 19:37 | பார்வைகள் : 1891
ட்ராமில் மோதி ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 29, நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தின் Boulevard Gouvion-Saint-Cyr வீதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணி அளவில், T3b ட்ராமில் மோதுண்டு ஒருவர் விபத்துக்குள்ளானார். மிதிவண்டியில் பயணித்தவரே ட்ராமுடன் மோதுண்டு காயமடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.