நோர்து டேம் : திறப்புவிழாவில் கலந்துகொள்ளும் ஜில் பைடன்.. ட்ரம்ப் வருகை சந்தேகம்..??!!
1 மார்கழி 2024 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 1014
நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழாவில் அமெரிக்காவின் முதல்பெண்மணி ஜில் பைடன் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் வருகை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழாவுக்கு பல்நாட்டுத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் தற்போதைய முதல் பெண்மணியாக உள்ள ஜில் பைடன் கலந்துகொள்கிறார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று, அதில் டொனாட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்த போதும், டிசம்பர் 20 ஆம் திகதியே அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இந்த திறப்புவிழாவுக்கு அவருடைய வருகை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நோர்து-டேம் தேவாலயம் தீவிபத்துக்குள் சிக்கியிருந்ததன் பின்னர், ஐந்து ஆண்டுகள் திருத்தப்பணிகள் இடம்பெற்று, அடுத்தவாரம் (டிசம்பர் 7 ஆம் திகதி) திறக்கப்பட உள்ளது. திறப்புவிழாவுக்கு பரிசுத்த பாப்பரசர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அழைப்பை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அ