பரிசை நோக்கி வந்த தொடருந்து விபத்தில் சிக்கியது.. ஏழுமணிநேரம் சிக்கித்தவித்த பயணிகள்!!
1 மார்கழி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 6230
OuiGo தொடருந்து ஒன்றுடன் மகிழுந்து மோதி விபத்து ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 1,000 வரையான பயணிகள் ஏழு மணிநேரத்துக்கு மேலாக தொடருந்துக்குள் காத்திருக்க நேர்ந்தது.
நவம்பர் 29, இச்சம்பவம் Marmande (Lot-et-Garonne) நகரில் இடம்பெற்றுள்ளது. Toulouse நகரில் இருந்து பரிசை நோக்கி வந்த குறித்த தொடருந்து, பிற்பகல் வேளையில், தொடருந்து கடவை ஒன்றினை கடக்க முற்பட்ட மகிழுந்தை மோதி தள்ளியது. மகிழுந்து சாரதி காயமடையாமல் தப்பித்துள்ளார்.
ஆனால் தொடருந்து பயணிகள் கிட்டத்தட்ட 7 மணிநேரங்கள் தொடருந்துக்குள் சிக்கி தவித்தனர். கடும் குளிருக்குள் கிட்டத்தட்ட 1,000 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
3.45 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்ற நிலையில், இரவு 10.45 மணி அளவிலேயே தொடருந்து அங்கிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டதாக SNCF குறிப்பிட்டது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan