கம்போடியாவும் பிரெஞ்சு காலனித்துவமும்!!
20 தை 2019 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 17953
பிரான்சின் காலனித்துவத்துக்குள் சிக்குண்ட நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால் கம்போடியா இதில் ஒரு தினுசு!!
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியவை 1863 ஆம் ஆண்டில் இருந்து பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் 1941 இல் இருந்து 1945 ஆம் ஆண்டு வரை ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் 1945 ஆம் ஆண்டு மீண்டும் பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கம்போடியா வந்தது.
ஆனால், கம்போடிய மக்கள் பிரான்சின் காலனித்துவத்துக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்தனர். இதற்கு மற்றுமொரு காரணம் வியட்னாம்.
அண்டை நாடான வியட்னாமின் ஒரு பகுதி அப்போது கம்போடியாவுக்குள் இருந்தது. கம்போடியாவை கைப்பற்ற வேண்டுமென்றால் பிரான்சின் ஆதிக்கத்தை விலக்கவேண்டும். ஆனால் அதற்குரிய எந்த முயற்சியும் வியட்னாம் அரசு தரப்பில் எடுக்கவில்லை.
இதனால், கம்போடியாவுக்குள் இருந்து பிரான்சுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை வியட்னாம் அரசு கண்டும் காணாமலும் விட்டிருந்தது.
இரண்டாம் உலகமகா யுத்தம் நிறைவுக்கு வந்ததும், கம்போடிய மக்களிடம் புதிதாக கம்யூனிச சித்தாந்தங்கள் தோன்றின. தொடர்ந்தும் கம்போடியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை என உணர்ந்த பிரெஞ்சு அரசு, அங்கிருந்து விலக தீர்மாணித்தது.
கம்போடிய மக்கள் பிரான்சை எதிரி நாடாக பார்க்க விரும்பாத பிரெஞ்சு அரசு, அதற்கு சில வழிமுறைகளை கையாண்டது.
கம்போடியாவில் விட்டுச் செல்லும் சில பிரான்சின் அடையாளங்களை காப்பாற்றும் நோக்கில், அண்டை நாடான வியட்னாமை எதிரி நாடாக சித்தரித்து. 'நாங்கள் செல்கின்றோம். ஆனால் வியட்னாமியர் உங்கள் மீது துவேசம் கொண்டுள்ளனர். அவதானமாக இருங்கள்' என தெரிவித்ததோடு, இரண்டு நாடுகளின் எல்லைகளையும் மிக தெளியாக பிரித்துவிட்டு, வியட்னாமிய மக்களையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, 1953 ஆம் ஆண்டு கம்போடியாவுக்கு சுதந்திரம் வழங்கி, அங்கிருந்து வெளியேறியது.
இன்றளவிலும் இரு நட்டினருக்கும் இடையே மெல்லியதாக சில துவேஷம் இருந்துகொண்டே தான் உள்ளன!!