பிரான்சில் மார்பக புற்றுநோய், கடனாளிகளாகும் பெண்கள்.

1 மார்கழி 2024 ஞாயிறு 07:23 | பார்வைகள் : 3644
பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் பரவாலாக செய்யப்பட்டு வருகிறது, இருப்பினும் அதிகமான பெண்கள் தம்மை பரிசோதித்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனும் குற்றச்சாட்டு பெண்கள் மேல் சுகாதார அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சில பெண்கள் அமைப்பு அரசின் சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
அதாவது ஒரு பெண் தன் மார்பக புற்றுநோய்க்கு செலவு செய்யும் பணத்தை அரசாங்கம் 100% சதவீதம் திருப்பி தருவதில்லை இதனால் மார்பக புற்றுநோய் சத்திர சிகிச்சை செய்த பின்னர் பெரும்பாலாரப் பெண்கள் கடனாளி ஆகிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு பெண் மார்பகப் புற்றுநோய் சத்திர சிகிச்சையின் பின்னர் தன் மார்பகப் பகுதிகளை சீரமைப்பது, அதற்கான உள்ளாடைகளை கொள்வனவு செய்வது, பராமரிப்பதற்கான மருந்துகள் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது போன்றவை அரசாங்கத்தினால் திருப்பி செலுத்தப்படுவதில்லை. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு சத்திர சிகிச்சையின் பின்னர் 6,000 யூரோக்கள் மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு செலவு செய்யப்படுகிறது இதில் அரசாங்கம் 4,000 யூரோக்களுக்கு குறைவாகவே திருப்பி செலுத்துகிறது இதனால் அந்த பெண்கள் கடனாளியாகிறார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவே இதனை சுகாதார துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.