மக்கள் கூட்டத்தினர் மீது விழுந்த இரும்பு தட்டு.. - 13 பேர் காயம்!!

1 மார்கழி 2024 ஞாயிறு 07:44 | பார்வைகள் : 3414
கிறிஸ்மஸ் சோடனைக்காக வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட பாரிய அளவுடைய இரும்புத்தட்டு ஒன்று மக்கள் கூட்டத்தினர் மீது விழுந்ததில், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நவம்பர் 30 சனிக்கிழமை இச்சம்பவம் Trouville-sur-Mer (Calvados) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Place du Maréchal Foch பகுதியில் இரும்பிலான இராட்சத பறவை ஒன்றை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்கள். அதன் ஒரு பகுதியான இரும்பு தட்டே விழுந்துள்ளது. இரவு 7 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், இதில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.