வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை குடியிருப்பு பகுதிகள்
1 மார்கழி 2024 ஞாயிறு 07:50 | பார்வைகள் : 522
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் (நவ 30) நேற்று முதல் கனமழை கொட்டியது..
இதனால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக குறைந்த அளவு மாநகர பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் வெள்ளம் காரணமாக. பல இடங்களில் பொதுப் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்பு பகுதிகள்
மேற்கு மாம்பலம், கொருக்கு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில இடங்களில் வீடுகளில் தரை தளத்தில் தண்ணீர் புகுந்தது.
அடையாறு, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், ஷெனாய் நகர், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, சூளைமேடு, வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மழைநீர் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மின்சப்ளை துண்டிப்பு
மழை காரணமாக, ஆவடி சுற்று வட்டார பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.