Paristamil Navigation Paristamil advert login

Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!

Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!

19 தை 2019 சனி 10:30 | பார்வைகள் : 17928


இன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனால் அது இன்றல்ல... நூறு வருடங்களுக்கு முன்னால்!!
 
பிரெஞ்சு தேசத்தின் அப்போதைய அளப்பரிய சாதனை அது. விமான கண்டுபிடிப்புகள் ஆரம்பக்கட்டத்தில் இருந்த நிலையில், பல்வேறு புதிய முயற்சிகள், சாதனைகள் என பலதை பிரெஞ்சு விமானிகள் மேற்கொண்டிருந்தனர். ஈஃபிள் கோபுரத்தின் கால்களுக்கிடையேயும் ஒருதடவை விமானம் நுழைந்து மறு வழியாக வந்து விபத்துக்குள்ளாகி... அதை விடுங்கள்!!
 
1919 ஆம் ஆண்டு. முதலாம் உலகப்போர் அப்பொழுதுதான் முடிவுக்கு வந்திருந்தது. விமானி Jules Védrines, தாம் விமானம் ஒன்றை ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள Galeries Lafayette வணிக வளாகத்தின் மேல் கூரையில் தரையிறக்குவதாக அறிவித்தார். 
 
அனைவருக்கும் ஆச்சரியம். வெறுமனே 27 மீற்றர்கள் நீளம் கொண்ட கூரை. அதன் மேல் எப்படி தரையிறக்குவது? 
 
அந்த சம்பவம் வெற்றிகரமாக ஜனவரி 19, 1919 ஆம் ஆண்டு (இன்றோடு சரியாக 100 வருடங்கள்) இடம்பெற்றது. 
 
Caudron G3 எனும் இருவர் அமரக்கூடிய விமானம் அது. அன்று ஞாயிற்றுக்கிழமை. Issy-les-Moulineaux இல் இருந்து தனது விமானத்தை கிளப்பி... பரிஸ் நகர மக்கள் பார்க்கும் வண்ணம் வானில் ஒய்யாரமாக பறந்து வந்தார். 
 
12:43 மணிக்கு சரியாக Galeries Lafayette கூரையின் மேல் வெற்றிகரமாக தரை இறக்கினார். வாழ்த்துமழை பொழிந்தது. அவரது சாதனையை பாராட்டி அவருக்கு 25,000 பிராங்குகள் சன்மானம் வழங்கப்பட்டது. 
 
இன்றளவும் இது ஒரு மைல்கல் சாதனை தான்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்