Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி அனுரவை பாராட்டும் ரணில்

ஜனாதிபதி அனுரவை பாராட்டும் ரணில்

1 மார்கழி 2024 ஞாயிறு 08:53 | பார்வைகள் : 4151


ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும்.

வினில் மெனிக் நிறுவனத்தின் உரிமையாளர் டபிள்யூ.வினில் தலைமை தாங்குகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்